சந்தேகம்தெளி - FAQ

  1. சொர்க்கம்.கொம் இலவச சேவையா? இல்லை.ஒருவர் உள்நுழைவு கணக்கை(Login Account) பெயா் மின்னஞ்சல் முகவரியுடன் இலவசமாக உருவாக்கி கொள்ளலாம் ஆனால் சேர்க்கும் ஒவ்வொரு சுயவிபரத்துக்கும்(Profile) கட்டணம் செலுத்தப்பட்டிருக்கவேண்டும். அதுவரை அது செயல்நிலையில் (Active) இருக்காது.பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களும் தாமாகவே தமது விபரங்களை திருத்த கையாள முடியும் ஆயினும் இவை எமது அலுவலர்களின் கண்காணிப்புக்குட்பட்டிருக்கும்.
  2. பிழையான தகவல்களை ஒரு உறுப்பினர் கொண்டிருந்தால் என்ன செய்யவேண்டும்? இது பற்றி உடனடியாக ஆதாரத்துடன் எமக்கு தெரியப்படுத்தினால் குறித்த உறுப்பினர் விபரம் விசாரணையின் பின் நீக்கப்படும்
  3. எனது ஜாதகத்தினை(Chart) சேர்க்க முடியுமா?ஆம் உங்கள் ஜாதகத்தின் கிரக நிலை நவாம்ச நிலைகளை குறித்த தொடுப்புக்களில் மாற்றிக்கொள்ளலாம். படமாக பதிவேற்றினால் எமது அலுவலர்கள் அதை இற்றைப்படுத்துவர் (Update)
  4. கட்டணம் விபரம் என்ன? ஒருவர் உறுப்பினராக பதிவு செய்தால் அவருடய கணக்கின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட சுயவிபரங்கள் அவருக்காகவோ பிறருக்காகவோ சேர்க்கலாம் சேர்க்கப்படும் ஒவ்வொன்றுக்கும் கட்டணம் 50$ அறவிடப்படும்.(இதற்காக புதிய சுயவிபரம்(New Profile) என்ற பகுதின் ஊடாக இணைக்கலாம்) அவ்விபரங்களின் சுருக்கம் சொர்க்கம்.கொம் இல் தேடப்படும்போது கிடைக்கும்.கட்டணங்களை இணைய வழியிலோ அல்லது நேரடியாக வோ செலுத்தலாம்.இணைய வழியில் செய்தால் அது குறித்த விபரங்களை அனுப்பிவைத்தாலும் நேரடியாக செலுத்தும்போது எமது அலுவலர்கள் குறித்த விபரத்தினை செயல்படுத்துவார்க்ள் (Activation)
  5. நான் எனது பதிவை எச்சந்தர்ப்பத்திலும் நீக்க முடியுமா? நிச்சயமாக! நீங்கள் விரும்பிய நேரத்தில் உங்கள் கணக்கினை நீக்க முடியும் அதற்கு நீங்கள் உங்கள் கணக்கினுாடாக உள்நுழைய வேண்டும். உறுப்பினர் ஒருவர் தன்னை நீக்கினால் அவருடய பதிவுகள் அனைத்தும் நீக்கப்படும்.
  6. தமிழில் எவ்வாறு ரைப் செய்வது?  மொழி மாற்றியினை உபயோகித்து ரைப்செய்து அதனை பிரதி செய்து உரிய பெட்டிகளில் இடலாம்
  7. ஆங்கிலத்தில் ரைப்செய்து விபரங்களை இட்டால் ஏற்பீர்களா? நிச்சயமாக ஆங்கிலமும் ஏற்றுக்கொள்ளப்படும். மொழி ஒரு தடையல்ல
  8. உங்கள் தளத்தில் பதிவு செய்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த உதவி செய்வீர்களா? ஆம் மேலதிக விபரங்கள் பெற எம்முடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும். நாம் பொருத்தம் பார்த்து பொருந்தக்கூடிய விபரங்களை அனுப்பி வைப்போம் எம்முடன் தொடர்பு கொள்ளவும்..